ஜெயிலர் படத்தின் முதல் காட்சியை பார்த்த பட குழுவினரின் பேட்டிகள்
நடிகை ரம்யா கிருஷ்ணன் பேட்டி
முதல்முறையாக ரஜினி சார் படத்தின் முதல் காட்சி பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
ரசிகர்கள் படத்தை ரசித்தார்களா என்ற கேள்விக்கு நீங்கள் படம் பார்த்தீர்களா அந்த சத்தம் எப்படி இருந்தது வேற லெவல் என்றார்.
ஜெய்லர் படத்தின் பார்ட் 2வில் நடிப்பீர்களா என கேட்டதற்கு கண்டிப்பாக நடிப்பேன் என்றார்.
நடிகர் வசந்த் ரவி பேட்டி
ஜெய்லர் படத்தின் மகன் கதாபாத்திரத்தை என்னைவிட யாரும் சிறப்பாக நடிக்க முடியாது என்று ரஜினி சார் சொன்னாங்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
என் அப்பாவின் கனவு ரஜினி சாருடன் நான் நடிக்க வேண்டும் என்பதுதான். அது தற்போது நிறைவேறி உள்ளது.
இசை அமைப்பாளர் அனிருத் பேட்டி
படம் மாஸாக உள்ளது.படம் பாத்துட்டு இன்னும் ரஜினி சார் கிட்ட பேசல. இதுக்கு முன்னாடி பேசும்போது ரஜினி சார் நிறைய சொன்னாங்க. ரசிகர்கள் என்ஜாய் பண்ணாங்க ரொம்ப சந்தோஷமா இருக்கு.
நடிகர் ரஜினிகாந்த் படத்தை பார்த்து இசை பற்றி என்ன சொன்னார் என்ற கேள்விக்கு ஒரே ஒரு வார்த்தை தான் கூறினார் ‘ஓ மை காட்’ என கூறியதாக கூறினார்.
படத்தில் பழைய பாடல்கள் பயன்படுத்தியது குறித்து கேள்விக்கு, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று பதிலளித்தார்.
துணை நடிகை மிர்னா மோகன்
ரஜினி சார் உடன் இந்த படத்தில் நடித்த ஒவ்வொரு நாளும் எனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது.
அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. பட வாய்ப்புகள் எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த படத்தில் நடித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.