ஜெயம் ரவி நடிப்பில் இறைவன் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா இருவரும் இப்படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தை மனிதன், வாமனன், என்றென்றும் புன்னகை உள்ளிட்ட படங்களை இயக்கிய அகமது இயக்கியுள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் யுவன் சங்கர் ராஜாயிலும் இது உருவாகி உள்ளது. சில மாதங்களுக்கு முன்பாக படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் இந்த படத்தின் டிரைலர் இன்று காலை 11.11 மணி அளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் அடுத்தடுத்த போஸ்டர்களை வெளியிட்டு அறிவித்துள்ளனர். அந்த போஸ்டரின் மூலம் இப்படம் சைக்கோ திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் ஜெயம் ரவி இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.