spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'கூலி' படத்தில் நடிகர் சத்யராஜ் தான் வில்லனா?

‘கூலி’ படத்தில் நடிகர் சத்யராஜ் தான் வில்லனா?

-

- Advertisement -

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் குறித்த சில தகவல்கள் வெளியாகி உள்ளது.'கூலி' படத்தில் நடிகர் சத்யராஜ் தான் வில்லனா?

நடிகர் ரஜினி ஜெயிலர் படத்திற்கு பிறகு தனது 170 ஆவது படமான வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரஜினி நெகட்டிவ் ஷேடட் ரோலில் நடிக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகார்ஜுனா, சத்யராஜ், சௌபின் சாஹிர், உபேந்திரா, ஸ்ருதிஹாசன், உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இவர்களுக்கான அறிமுக போஸ்டரையும் படக்குழுவினர் அடுத்தடுத்து வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சத்யராஜ் தான் கூலி திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று புதிய தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதாவது கிட்டத்தட்ட 36 வருடங்களுக்குப் பிறகு நடிகர் ரஜினியும் சத்யராஜும் இணைந்து கூலி திரைப்படத்தில் நடிக்கின்றனர். 'கூலி' படத்தில் நடிகர் சத்யராஜ் தான் வில்லனா?இதில் சத்யராஜ் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கனவே வெளியான தகவலின்படி நடிகர் சத்யராஜ் இந்த படத்தில் ரஜினிக்கு நண்பனாக நடிக்கிறார் என்று ஒரு பக்கம் தகவல்கள் உலா வந்தாலும் மற்றொரு பக்கம் சத்யராஜ் கூலி திரைப்படத்தில் வில்லனாக தான் நடிக்கிறார் என்றும் புதிய தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா இணையத்தில் ரசிகர்களுக்கு கேள்விகளுக்கு பதில் அளித்த போது கூலி திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் வில்லனாக நடிக்கவில்லை என்பதையும் தெரிவித்துள்ளார். எனவே சத்யராஜின் கதாபாத்திரம் எந்த மாதிரியான கதாபாத்திரமாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மேலும் சில தினங்களுக்கு முன்பாக நடிகர் நாகார்ஜுனா கூலி திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்ற செய்திகள் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் யார் யார் என்னென்ன கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ