Homeசெய்திகள்சினிமாமீண்டும் இணைகிறதா 'கோமாளி' பட கூட்டணி?

மீண்டும் இணைகிறதா ‘கோமாளி’ பட கூட்டணி?

-

கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெயம் ரவி நடிப்பில் கோமாளி திரைப்படம் வெளியானது. இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். மீண்டும் இணைகிறதா 'கோமாளி' பட கூட்டணி?இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து யோகி பாபு, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரித்திருந்தார். ஹிப் ஹாப் ஆதி இதற்கு இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. எனவே அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் என்ன படம் இயக்குவார் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில் லவ் டுடே எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இந்த படமும் இளைஞர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதைத் தொடர்ந்து பிரதி பிறந்தநாள் விக்னேஷ் சிவன் அதைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் இயற்றி வரும் எல்ஐசி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.மீண்டும் இணைகிறதா 'கோமாளி' பட கூட்டணி?

இந்நிலையில் வேல்ஸ் ஃபிலிம் நிறுவனத்தின் உரிமையாளர் ஐசரி கே கணேஷ், மீண்டும் கோமாளி பட கூட்டணியில் புதிய படத்தை உருவாக்க திட்டமிட்டு பிரதீப் ரங்கநாதனை அழைத்துள்ளார். ஆனால் பிரதீப் ரங்கநாதன் தற்போது நடிப்பில் ஆர்வம் காட்டி வருவதால் இப்போதைக்கு படம் இயக்குவதாக இல்லை நடிப்பு மட்டும்தான் என்று ஐசரி கே கணேஷிற்கு எந்தவித பதிலும் கொடுக்கவில்லையாம்.

இருப்பினும் மீண்டும் கோமாளி பட கூட்டணி இணைந்தால் நன்றாக இருக்கும் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்..

MUST READ