பராசக்தி படம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயனின் 25 வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பராசக்தி. சுதா கொங்கரா இயக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. 1965 காலகட்டத்தில் நடந்த இந்தி திணிப்பை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்திருக்கிறார். வில்லனாக ரவி மோகனும் முக்கிய கதாபாத்திரத்தில் அதர்வாவும் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைக்கிறார். ரவி கே சந்திரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் மதுரை, சிதம்பரம், இலங்கை, சென்னை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. மேலும் படமானது அடுத்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து முன்னோட்ட வீடியோவும், அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. சமீபத்தில் இதன் முதல் பாடலும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்நிலையில் இந்த படம் குறித்த புதிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இந்த படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடல் ஒன்றை பாடியிருக்கிறாராம். இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. இனிவரும் நாட்களில் யுவன் குரலில் உருவாகியுள்ள பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The power house is singing for #Parasakthi #GV100 🔥 @thisisysr … what a rendition 🔥goosebumps mode on 🔥 pic.twitter.com/DcTqIGlxlN
— G.V.Prakash Kumar (@gvprakash) November 12, 2025

மேலும் இது தொடர்பாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், தனது எக்ஸ் தள பக்கத்தில் யுவன் சங்கர் ராஜா பாடல் பாடும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து இதனை உறுதி செய்துள்ளார்.


