spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎன்னது 'கைதி 2' படம் ட்ராப் ஆ?.... பேரதிர்ச்சியில் ரசிகர்கள்!

என்னது ‘கைதி 2’ படம் ட்ராப் ஆ?…. பேரதிர்ச்சியில் ரசிகர்கள்!

-

- Advertisement -

கைதி 2 படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.என்னது 'கைதி 2' படம் ட்ராப் ஆ?.... பேரதிர்ச்சியில் ரசிகர்கள்!

கடந்த 2019 ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கைதி’ எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் லோகேஷ், கார்த்தியை வேறொரு பரிமாணத்தில் காட்டி இருந்தார். சாம். சி.எஸ்-ன் இசை படத்திற்கு முதுகெலும்பாக விளங்கியது. ஆக்ஷன் – திரில்லர் ஜானரில் வெளியான இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில் இதன் அடுத்த பாகம் எப்போது தொடங்கும்? என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் லோகேஷ் அடுத்தடுத்த படங்களில் பிசியானதால் ‘கைதி 2’ படமானது தொடர்ந்து தள்ளிப்போய்க் கொண்டே போகிறது. தற்போது ‘கூலி’ படத்தை முடித்த லோகேஷ் அடுத்ததாக ‘கைதி 2’ படத்தை தான் கையில் எடுப்பார் என சமீபகாலமாக பல தகவல்கள் வெளிவந்தன. என்னது 'கைதி 2' படம் ட்ராப் ஆ?.... பேரதிர்ச்சியில் ரசிகர்கள்!இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்கப் போகிறார் எனவும் பேச்சு அடிபடுகிறது. இருப்பினும் ‘கூலி’ படத்திற்கு கிடைத்த ரிசல்ட் லோகேஷ் கனகராஜின் அடுத்தடுத்த படங்களை காலி செய்வதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் அமீர்கானை வைத்து லோகேஷ் இயக்க இருந்த சூப்பர் ஹீரோ படம் கைவிடப்பட்டதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களாலும், கருத்து வேறுபாடு காரணமாகவும் ‘கைதி 2’ திரைப்படம் தற்போதைக்கு உருவாக வாய்ப்பில்லை என சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது. என்னது 'கைதி 2' படம் ட்ராப் ஆ?.... பேரதிர்ச்சியில் ரசிகர்கள்!ஆனால் ‘கைதி’ திரைப்படம் தான் எல்சியு- வின் ஆரம்ப புள்ளியாக இருந்த நிலையில் ‘கைதி 2’ திரைப்படம் உருவாகாமல் போனால் எல்சியு-வே ஒட்டுமொத்தமாக காலி ஆகிவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் லோகேஷ் கனகராஜும் இழந்த தனது வெற்றியை மீண்டும் பெறுவதற்கான ஒரே வழி ‘கைதி 2’ தான். ஆனால் அந்த படமே கைவிடப்பட்டதாக வெளிவரும் தகவல்கள் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இது தொடர்பாக லோகேஷ் கனகராஜ் ஏதேனும் பதில் கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ