ஏகே 65 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் தற்போது கார் ரேஸிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். அதே சமயம் ‘ஏகே 64’ படத்திலும் கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை ‘ட் பேட் அக்லி’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப்போகிறார். இது தொடர்பான தகவல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தி வருகிறது. ரோமியோ பிச்சர்ஸின் தயாரிப்பிலும் அனிருத்தின் இசையிலும் உருவாக இருப்பதாக சொல்லப்படும் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகும் என நடிகர் அஜித் சமீபத்தில் நடந்த பேட்டியில் கூறி இருக்கிறார். மேலும் ‘ஏகே 65’ படத்தை யார் இயக்கப்போகிறார்? என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
அதன்படி அஜித்தின் லைன் அப்பில் பிரசாந்த் நீல், ஹனீப் அடேனி, சுகுமார் ஆகிய இயக்குனர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் அஜித்தை இயக்க வேண்டும் என்ற ஆசையுடன் வலம் வருகிறார் லோகேஷ். அதன்படி சமீபத்தில் நடந்த பேட்டியில் 100% அஜித்தை வைத்து படம் பண்ணுவேன் என்று கூறியுள்ளார். எனவே இவர்களது கூட்டணியில் உருவாகும் புதிய படமானது ‘ஏகே 65’ படமாக இருக்கும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமில்லாமல் இந்த படமானது 2027-இல் தொடங்கும் என்று சமூக வலைதளங்களில் பல தகவல்கள் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறது. லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே ரஜினி, கமல், விஜய் என டாப் நடிகர்களை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நிலையில் அஜித்தை, அவர் புதிய அவதாரத்தில் காட்டுவார் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.


