அண்ணாத்தை படத்திற்கு பிறகு ரஜினி ஜெயிலர் படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இப்படம் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு 70% வரை முடிந்துள்ளது. இப்படம் ஏப்ரலில் வெளிவர இருப்பதாக தகவல் பரவி வரும் இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குனர் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் T. ஞானவேல் இயக்க உள்ளார்.
”ஜெயிலர்” படத்தை அடுத்து ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்கும் ”லால் சலாம்” படத்தின் சிறப்புத் தோட்டத்தில் நடிக்க உள்ளார் ரஜினி.
இந்தநிலையில், ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானது. முதலில் டான் படத்தின் இயக்குனர் சி.பி சக்கரவர்த்தி இயக்குவதாகவும் கூறப்பட்டது.
ஆனால் சி.பி சக்கரவர்த்தியின் கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்பதால் லவ் டுடே இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குவதாகவும் தகவல் வெளியானது.
அவர் வேறு யாருமில்லை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் டி.ஜே ஞானவேல் தான். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யாவின் நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் டி. ஜே ஞானவேல்.
இருளர் பழங்குடியின மக்களின் உரிமைகள் குறித்து பேசப்பட்ட இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது.
உலக அளவில் பல சர்வதேச விருதுகளை இப்படம் குவித்துள்ளது என்பது அனைவராலும் அறிந்த ஒன்று.
இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினியின் பட வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளதாக தெரிகிறது. ஆனாலும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.