spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாலோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு?

லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு?

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் ‘மாநகரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு?அதைத் தொடர்ந்து இவர் இயக்கிய ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவரது இயக்கத்தில் ‘கூலி’ திரைப்படம் வெளியானது. ரஜினியின் 171 வது படமாக வெளியான இந்த படம் ஜெனரல் ஆடியன்ஸ் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரஜினி ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி தீர்த்து வருகின்றனர். அந்த வகையில் இப்படம் கிட்டத்தட்ட ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என தகவல் கிடைத்திருக்கிறது.லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு? இதைத் தவிர லோகேஷ் கனகராஜ், ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரையும் வைத்து கேங்ஸ்டர் படம் ஒன்றை இயக்கப் போவதாக சொல்லப்படுகிறது. மேலும் கைதி 2, விக்ரம் 2, ரோலக்ஸ் ஆகிய படங்களும் லோகேஷ் கனகராஜின் டைரக்ஷன் லிஸ்டில் இருக்கிறது. இதற்கிடையில் தயாரிப்பாளராக உருவெடுத்த லோகேஷ், ‘பென்ஸ்’ போன்ற படங்களை தயாரித்து வருகிறார். அடுத்தது இவர், ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார் என ஏற்கனவே தகவல் கசிந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு?அதன்படி லோகேஷ் ஹீரோவாக நடிக்க உள்ள புதிய படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கப் போவதாகவும், இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் இந்த படத்தில் லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. அதன்படி மிர்னா மேனன் அல்லது ரச்சிதா ராம் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் லோகேஷ் கனகராஜு ஜோடியாக நடிக்க வாய்ப்புள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நடிகை பிரியங்கா மோகனிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு?அதற்கு முன்பாக ஆரம்பத்தில் இந்த படத்தில் லோகேஷுக்கு ஜோடியாக நடிக்க மமிதா பைஜுவை தான் படக்குழு அணுகியதாம். ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக மமிதா பைஜு இந்த படத்தில் நடிக்கவில்லை என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இந்த படத்தில் யார் கதாநாயகியாக நடிக்கப் போகிறார்? என்பது தொடர்பான அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ