Homeசெய்திகள்சினிமா'சூர்யா 45' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறாரா மிர்ணாள் தாகூர்?

‘சூர்யா 45’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறாரா மிர்ணாள் தாகூர்?

-

- Advertisement -

நடிகர் சூர்யா தற்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில் இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடித்து முடித்துள்ளார் சூர்யா. இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. 'சூர்யா 45' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறாரா மிர்ணாள் தாகூர்?அடுத்ததாக சூர்யா, ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. அதன்படி ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைக்க உள்ளார். இந்த படமானது கிராமத்துக் கதைக்களத்தில் உருவாகப் போவதாகவும் இதன் படப்பிடிப்புகள் நவம்பர் மாதத்தில் தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தில் சீதாராமம் புகழ் மிர்ணாள் தாகூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், மிர்ணாள் தாகூர், சூர்யா 45 படத்திற்காக தனக்கான கால் ஷீட்டை ஒதுக்கி தருவதாக கூறியுள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'சூர்யா 45' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறாரா மிர்ணாள் தாகூர்?அப்படி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் மிர்ணாள் தாகூர் நேரடியாக நடிக்கும் முதல் தமிழ் படம் சூர்யா 45 தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயனின் SK23 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருந்த நிலையில் ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் மிர்ணாள் தாகூரால் நடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் சூர்யா 45 திரைப்படத்தின் மூலம் இவர் தமிழில் அறிமுகமாக இருக்கும் தகவல் ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.

MUST READ