சிவகார்த்திகேயன் நடிக்கும் புறநானூறு படத்தில் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற அக்டோபர் 31 தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது 23வது திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு சிங்க நடை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்ததாக சிவகார்த்திகேயன் தனது 24 வது திரைப்படத்தை டான் படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் தனது 25வது திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன்.
அதாவது நடிகர் சூர்யா நடிக்க இருந்த புறநானூறு திரைப்படத்தில் சூர்யாவிற்கு பதிலாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இது தொடர்பான தகவல்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளியாகி வந்தது. அதன்படி புறநானூறு என்ற தலைப்பு மாற்றப்பட இருப்பதாகவும் இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கப்படும் எனவும் செல்லப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வில்லனாக நடிக்கப் போகிறார் என்று புதிய தகவல் உலா வந்தன. இந்நிலையில் இதன் கூடுதல் தகவலாக நடிகை ஸ்ரீ லீலா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்று புதிய அப்டேட் கிடைத்துள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது.


