சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. இதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44 வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தொடங்கப்பட்டு மிகத் தீவிரமாக நடைபெற்று வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. அடுத்ததாக சூர்யா, ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 வது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தினை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைக்க இருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. படத்தின் அறிவிப்பு போஸ்டரை பார்க்கும்போது இந்த படம் கிராமத்துக் கதைக்களத்தில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா 45 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் தொடங்கப்படும் என புதிய தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி இந்த படத்தில் காஷ்மிரா பர்தேசி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். காஷ்மிரா பர்தேசி ஏற்கனவே தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்து வரும் நிலையில் தமிழில் இவர் சிவப்பு மஞ்சள் பச்சை, பிடி சார் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சூர்யா 45 படத்திற்கு கருப்பு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு
ஹின்ட்-HINT என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது.