STR 49 படத்தின் கதாநாயகி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் இப்படம் 2025 ஜூன் 5 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. இதைத்தொடர்ந்து நடிகர் சிம்பு, பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தனது 49வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார். தற்காலிகமாக STR 49 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதே சமயம் இந்த படத்தில் நடிகர் சிம்பு, கல்லூரி மாணவனாக நடிக்கிறார் என செய்திகள் பரவி வருகின்றன. மேலும் இப்ப படத்தின் படப்பிடிப்புகளும் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியிருக்கின்றன. அதன்படி இப்படத்தில், நடிகை சாய் பல்லவியை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது. அது மட்டுமில்லாமல் நடிகர் சந்தானம் இப்படத்தில் மீண்டும் காமெடியனாக நடிக்க இருப்பதாகவும் புதிய அப்டேட் கிடைத்துள்ளது.
ஏற்கனவே சிம்பு, சந்தானம் ஆகிய இருவரும் இணைந்து மன்மதன், வல்லவன், வாலு, வானம், சிலம்பாட்டம் போன்ற பல படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். இந்நிலையில் மீண்டும் இவர்கள் இணையப்போகும் தகவல் படத்தில் மீதான எதிர்பார்ப்பை மேன்மேலும் அதிகமாக்கியுள்ளது. இருப்பினும் இனிவரும் நாட்களில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.