நடிகர் சூர்யா, சிறுத்தை சிவா இயக்கியுள்ள கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஏப்ரல் மாதத்தில் இப்படம் வெளியாக இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது.
இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்கவுள்ளார். சூரரைப் போற்றும் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இந்த கூட்டணி புறநானூறு படத்தில் இணைந்துள்ளது. இந்த புறநானூறு படமானது 1950 முதல் 1965 காலகட்டங்களில் நடப்பது போன்று, இந்தி திணிப்பை எதிர்க்கும் கல்லூரி மாணவனாக நடிகர் சூர்யா நடிக்க இருக்கிறார் என்றும் சமீபத்தில் சில தகவல்கள் கசிந்திருந்தது.
கங்குவா படத்தில் ஏற்பட்ட விபத்தில் இருந்து குணமடைந்த நடிகர் சூர்யா தற்போது சென்னை திரும்பியுள்ளார். இதற்கிடையில் புறநானூறு படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாத இறுதியில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் படமானது கல்லூரி கதைக்களம் என்பதால், படமாக்கப்பட இருக்கும் கல்லூரியின் விடுமுறை நாட்களுக்காக பட குழு காத்திருக்கிறதாம். எனவே பிப்ரவரி மாத இறுதியில் புறநானூறு படப்பிடிப்பை தொடங்க சுதா கொங்கரா திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த படப்பிடிப்புகள் மதுரை, திருச்சி, சிதம்பரம் ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
எனவே படப்பிடிப்பு சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து துல்கர் சல்மான் , நஸ்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.