நடிகர் அஜித் எச்.வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியானது துணிவு திரைப்படம் இது நடிகர் அஜித்திற்கு 61 வது படமாகும்.


உலகம் முழுக்க வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், அஜித்குமாரின் அடுத்த AK62 படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இதற்கான திரைக்கதை பணிகள் முடிவுற்ற நிலையில், அடுத்த மாதம் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் திடீரென ட்விட்டரில் AK63 படத்தை இயக்குனர் அட்லி இயக்குவதாக ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து பகிர்ந்து வருகின்றனர். இதனால் விழா மேடை ஒன்றில் கட்டாயம் அஜித்துக்கு படம் பண்ணுவேன் என அட்லீ கூறிய வீடியோ,மீம்கள் என பகிறப்பட்டு வருகிறது. மேலும் AK63 ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதற்கு முன் இயக்குனர் அட்லி தளபதியை வைத்து இயக்கியுள்ள படங்கள் வெற்றி படங்களாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.


