ஹிட் 3 படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தெலுங்கு சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் நானி. இவர் தமிழில் வெப்பம், நான் ஈ ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இது தவிர மீண்டும் இவர் தமிழில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இவர் தற்போது தி பாரடைஸ் திரைப்படத்தினை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர், சைலேஷ் கொலானு இயக்கத்தில் ஹிட் 3 திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தில் நானியுடன் இணைந்து ஸ்ரீநிதி ஷெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை வால் போஸ்டர் சினிமா நிறுவனமும், அன்அனிமஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. மிக்கி ஜே மேயர் இதற்கு இசையமைத்திருந்தார். கிரிமினல் திரில்லர் ஜானரில் உருவாகியிருந்த இந்த படத்தில் நடிகர் நானி, போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இப்படம் கடந்த மே 1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்ற இப்படம் வெளியான முதல் நாளில் மட்டுமே ரூ.43 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. அதன் பிறகு தொடர்ந்து வசூலை வாரி குவித்து வந்த இப்படம் கிட்டத்தட்ட ரூ. 125 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் வருகின்ற மே 29 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என புதிய அப்டேட் கிடைத்துள்ளது.