Homeசெய்திகள்சினிமா'கேம் சேஞ்சர்' படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா?

‘கேம் சேஞ்சர்’ படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா?

-

கேம் சேஞ்சர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.'கேம் சேஞ்சர்' படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா?

மெகா பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் ராம் சரண். இவர் தற்போது புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். மேலும் புஷ்பா பட இயக்குனர் சுகுமார் இயக்கத்திலும் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். அதேசமயம் ராம்சரண், பிரசாந்த் நீல் மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோருடன் தனது அடுத்தடுத்த படங்களில் கூட்டணி அமைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இதற்கிடையில் இவர் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் நிலையில் தமன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படத்தில் ராம்சரணு க்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்க வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்திருக்கிறார். மேலும் அஞ்சலி, ஜெயராம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் முடிவுக்கு வந்தது.'கேம் சேஞ்சர்' படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா? மேலும் படத்தில் இருந்து முதல் இரண்டு பாடல்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அடுத்தது இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். அதன்படி இந்த படம் வருகின்ற டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி இந்த படம் ஜனவரி 10ஆம் தேதி திரைக்கு வரும் என்று புதிய அப்டேட் கிடைத்துள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ