Homeசெய்திகள்சினிமாசந்தானம் நடிக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'.... ரிலீஸ் தேதி இதுதானா?

சந்தானம் நடிக்கும் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’…. ரிலீஸ் தேதி இதுதானா?

-

- Advertisement -

சந்தானம் நடிக்கும் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.சந்தானம் நடிக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'.... ரிலீஸ் தேதி இதுதானா?

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சந்தானம் தற்போது தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு 1, 2 மற்றும் டிடி ரிட்டன்ஸ் ஆகிய காமெடி கலந்த ஹாரர் திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வெற்றி படமாக அமைந்தது. எனவே இதைத்தொடர்ந்து டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் சந்தானம். இந்த படத்தினை நடிகர் ஆர்யா தயாரிக்க டிடி ரிட்டன்ஸ் படத்தை இயக்கிய பிரேம் ஆனந்த் இப்படத்தை இயக்கியுள்ளார்.சந்தானம் நடிக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'.... ரிலீஸ் தேதி இதுதானா? இந்தப் படத்தில் சந்தானம் தவிர மொட்ட ராஜேந்திரன், செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, கஸ்தூரி, யாஷிகா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். தீபக் குமார் பதி இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள ஆஃப்ரோ இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த படத்தில் இருந்து முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தன. அடுத்தது டிடி ரிட்டன்ஸ் படத்தைவிட இந்த படம் இரண்டு மடங்காக இருக்கும் என சொல்லப்படுகிறது. சந்தானம் நடிக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'.... ரிலீஸ் தேதி இதுதானா?மேலும் இந்த படம் 2025 மே மாதம் திரைக்கு வரும் என படக்குழு ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் மே 8ஆம் தேதி திரைக்கு வரும் என லேட்டஸ்ட் தகவல் தெரிவிக்கின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ