Homeசெய்திகள்சினிமாவிக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் கூட்டணியின் 'எல்ஐகே'.... ரிலீஸ் தேதி இதுதானா?

விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் கூட்டணியின் ‘எல்ஐகே’…. ரிலீஸ் தேதி இதுதானா?

-

- Advertisement -

விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் கூட்டணியின் எல்ஐகே படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் கூட்டணியின் 'எல்ஐகே'.... ரிலீஸ் தேதி இதுதானா?

தமிழ் சினிமாவில் விக்னேஷ் சிவன் நானும் ரெளடி தான் படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவர் தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு எல்ஐகே (Love Insurance Kompany) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடிக்க இவர்களுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் பிரதீப் ரங்கநாதனின் தந்தையாக பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான சீமான் நடித்துள்ளார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்ட நிலையில் சிங்கப்பூர், மலேசியா போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. தற்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் கூட்டணியின் 'எல்ஐகே'.... ரிலீஸ் தேதி இதுதானா?அதேசமயம் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் ‘தீமா தீமா’ எனும் பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படம் 2025 மே மாதம் 16ஆம் தேதி திரைக்கு வரும் என புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ