spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஆர் ஜே பாலாஜி, திரிஷா கூட்டணியில் உருவாகும் புதிய படம்..... டைட்டில் இது தான்!

ஆர் ஜே பாலாஜி, திரிஷா கூட்டணியில் உருவாகும் புதிய படம்….. டைட்டில் இது தான்!

-

- Advertisement -
kadalkanni

நடிகர் ஆர்.ஜே பாலாஜி, விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரௌடி தான் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். ஆர் ஜே பாலாஜி, திரிஷா கூட்டணியில் உருவாகும் புதிய படம்..... டைட்டில் இது தான்!அதைத்தொடர்ந்து இவர் எல் கே ஜி, ரன் பேபி ரன், வீட்ல விசேஷம், சிங்கப்பூர் சலூன் போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்து பெயர் பெற்றார். இதற்கிடையில் கடந்த 2020இல் மூக்குத்தி அம்மன் எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார் ஆர் ஜே பாலாஜி. இந்த படத்தில் ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட், மௌலி போன்றோர் நடித்திருந்தனர். மேலும் இதில் அம்மனாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதன் வெற்றியை தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி , மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்ட நிலையில் அதற்கான வேலைகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது என்று ஏற்கனவே தகவல்கள் வெளியானது. ஆர் ஜே பாலாஜி, திரிஷா கூட்டணியில் உருவாகும் புதிய படம்..... டைட்டில் இது தான்!அதன்படி மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தில் நயன்தாராவிற்கு பதிலாக நடிகை திரிஷா அம்மனாக நடிக்கப் போகிறார் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் ஆர் ஜே பாலாஜி, திரிஷா கூட்டணியில் உருவாக உள்ள இந்த புதிய படத்திற்கு மாசாணி அம்மன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ