spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதிமுகவை முந்துகிறாரா விஜய்? சர்வே பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தவா! விளாசும் உமாபதி!

திமுகவை முந்துகிறாரா விஜய்? சர்வே பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தவா! விளாசும் உமாபதி!

-

- Advertisement -

வடமாவட்ட மக்கள் கல்வி அறிவு, பொருளாதார வளர்ச்சி இல்லாததால் சினிமா நடிகர்களின் பிடியில் எளிதில் சிக்கி விடுவதாகவும், அதனால் திரைத்துறையினரின் முதன்மையான வாக்கு வங்கியாக இந்த மாவட்டங்கள் திகழ்வதாகவும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

ஊடகங்களில் வெளியாகும் கருத்துக்கணிப்புகளில் விஜய்க்கு பெரும்பான்மை உள்ளதாக புள்ளி விவரங்கள் வெளிவருவதன் அரசியல் குறித்து, மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- தேர்தல் நெருங்க நெருங்க வலதுசாரி பத்திரிகைகளில் கருத்துக்கணிப்புகள் வர தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல வலதுசாரி நாளிதழ் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் விஜய் கணிசமான இடங்களில் வெற்றி பெறுவார் என்றும், போட்டியே விஜய்க்கும் திமுகவுக்கும் தான் என்று சொல்கிறார்கள்.

கருத்துக்கணிப்பு வந்துள்ள நாளிதழில் காசை கொடுத்தால் எதை வேண்டும் என்றாலும் போடுவார்கள். தற்போது வடஇந்திய ஊடகம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் வன்னியர் சமுதாய வாக்குகள்ள விஜய்க்கு விழும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பாக அண்ணாமலைக்கு விழும் என்று சொன்னார்கள். தற்போது அண்ணாமலை இல்லை என்பதால் விஜய்க்கு விழும் என்று சொல்கிறார்கள்.

விஜயகாந்த் தொடங்கியது தான் பாமகவின் அழிவாகும். பாமக எங்கு வலுவாக உள்ளதோ அங்கேயே போட்டியிட்டு விஜயகாந்த் வெற்றி பெற்றார். அவரது மறைவுக்கு பின்னர் கட்சியை மீண்டும் கொண்டுவந்து விடலாம் என்று நினைத்தார்கள். ஆனால் தற்போது விஜய் வந்துவிட்டார். ராமதாஸ் நல்ல ஒரு கூட்டத்தை சேர்த்து வைத்துள்ளார். அந்த வாக்குகளை அப்படியே அள்ளிவிடுவார்கள். அந்த வாக்குகள் எல்லாம் தற்போது விஜய்க்கு தான் போக போகிறது. அரசியல்வாதிகள் முதலில் மதுரையில் தான் மாநாடு போடுவார்கள். தென் மாவட்டங்கள் தற்போது பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துவிட்டது. வடமாவட்ட மக்களிடம் போதிய அளவு விழிப்புணர்வு கிடையாது. கல்வி, வளர்ச்சி இல்லாததால் அவர்களுக்கு சினிமா தான் தெரியும். அதனால் தான் தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் அந்த பகுதியை குறிவைக்கிறார்கள்.

இதற்காக தான் ராமதாஸ் வருத்தப்படுகிறார். நாம் படிப்பறிவு இல்லாமல் வைத்திருந்தால்தான் நமக்கு வாக்களிப்பார்கள் என்று செடி வளர்த்தால், சினிமாக்காரர்கள் வந்து காய்களை பறித்துச் சென்றுவிடுகிறார்கள் என்று. அவர்கள் 10ஆம் வகுப்பு பெயிலாகி விட்டு விவசாயம் பார்க்க வேண்டும், செங்கல்சூளைக்கு வேலைக்கு செல்ல வேண்டும். ஆண்ட பரம்பரை என்று பனியன் போட்டுக்கொள்ள வேண்டும். வன்னியர்களின் கல்வி வேலைவாய்ப்புக்காக இன்னும் எத்தனை வருடங்களுக்கு போராடுவார்கள். அவர்கள் இன்னும் செங்கல் சூளைக்குத்தான் வேலைக்கு செல்கிறார்கள். அவர்கள் வீட்டு பிள்ளைகள் எல்லாம் எம்எல்ஏ ஆகி விடுவார்கள். மனைவி எம்.பி. வேட்பாளர் ஆகிவிடுவார்கள். இதனால் அவர்கள் புதிய கட்சிக்கு சென்றால் பொறுப்பு கிடைக்கும் என்று வேறு பக்கம் செல்வார்கள். பாமக அழிந்ததற்கு இதுதான் முக்கிய காரணமாகும். நடிகர்கள் எல்லாம் வடமாவட்டங்களை போய் மொய்ப்பதற்கு காரணமும் அதுதான்.

கமல்ஹாசன் மட்டும்தான் கோவை பக்கம் சென்றார். அவரை அரியலூர் தொடங்கி தாம்பரம் வரை உள்ள மக்களுக்கு பிடிக்காது. அந்த பகுதி மக்களுக்கு கருப்பாக இருந்தால் தான் பிடிக்கும். தனுஷ், விஜயை தான் அவர்களுக்கு பிடிக்கும். விஜயகாந்த் தான் அவர்களுக்கு டாப் ஹீரோ. தற்போது ராமாதாசும், அன்புமணியும் சண்டையிட்டு கொண்டிருக்கிறார்கள். அப்போது, விஜய் வாக்குகளை அள்ளிக் கொணடிருக்கிறார். இந்த சூழலில் கருத்துக்கணிப்புகளுக்கு காசை கொடுத்தால் அவர்கள் விஜய்தான் பெரிய ஆள் என்று நம்பி விடுவார்கள்.  அதிமுக 3வது இடத்தில் உள்ளதாக சொல்கிறார்கள். அவர்கள் காசு கொடுத்தால், யாரை வேண்டும் என்றாலும் முதலிடத்தில் உள்ளதாக சொல்வார்கள். மீனவர்கள், டாக்சி டிரைவர்கள், காய்கறி விற்பவர்கள் என்று எல்லோரும் விஜயை தான் விரும்புவார்கள். திமுகவுக்கும், விஜய்க்கும் போட்டி கிடையாது. விஜய்க்கும், திமுகவுக்கும்தான் போட்டி.

"அரசு ஊழியர்களிடம் ஆதரவுக் கேட்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!"

சகாயம் ஐஏஎஸ் போன்றவர்கள் விஜயுடன் சேர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி அவர் விஜயிடம் சென்றால் பெயர் கெட்டுவிடும். கொள்ளையடிக்கிறார்கள் கொள்ளையடிக்கிறார்கள் என்று அரசியல் கட்சியை தாண்டி கூமுட்டைகளிடம் சென்றால் எப்படி இருக்கும். சாகயத்தை ஒரு ஹீரோவாக மக்கள் பார்க்கிறார்கள். அவர் விஜயுடன் சென்றால் காமெடியன் ஆகிவிடுவார். ஓபிஎஸ்-ஐ, விஜய் கூப்பிட்டார் என்று சொல்கிறார்கள். அவர் கூப்பிட்டார். இவர் கூப்பிட்டார் என்று சொன்னால்தான் அவருக்கு வியாபாரம் ஆகும். அதனால் இப்படி சொல்கிறார். ஓபிஎஸ் பாஜக கூட்டணியில் தான் உள்ளார்.

விஜய் என்ன பதவியில் இருந்துவிட்டு ஊழல் செய்யாமல் இருக்கிறார். இன்னும் நீங்கள் அரச பதவிக்கே வரவில்லை. நீங்கள் அரசியலுக்கு வருவதே ஊழல் செய்வதற்கும், பணத்தை கொள்ளையடிப்பதற்காகவும் தான். பிறகு என்ன ஊழல் இல்லை. விஜய் கட்சியால் பாதிக்கப்பட போவது சீமானும், பாமகவும் தான். விஜயை பழிவாங்கியது ஜெயலலிதா. அந்த அம்மாவையோ, அதிமுகவையோ பழிவாங்கி இருந்தால் பரவாயில்லை. ராமதாசை போய் பழிவாங்குவது தவறானது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ