spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமீண்டும் ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி?

மீண்டும் ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி?

-

- Advertisement -

மீண்டும் ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி?நடிகர் ரஜினி தற்போது தனது 170 ஆவது திரைப்படமான வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஜெய் பீம் புகழ் இயக்குனர் டிஜே ஞானவேல் இந்த படத்தை இயக்க லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு மாத காலத்தில் படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து விடும் எனவும் செய்திகள் பரவி வருகிறது.

இதைத்தொடர்ந்து நடிகர் ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். தலைவர் 171 என்று தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் மலையாள நடிகர் பிரித்விராஜும் நடிக்க உள்ளார் என ஏற்கனவே தகவல்கள் கசிந்திருந்தன.மீண்டும் ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி?

we-r-hiring

சமீபத்தில் கூட லோகேஷ் கனகராஜ் தலைவர் 171 படமானது முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாக இருப்பதாக மாஸான அப்டேட்டை கொடுத்திருந்தார். அத்துடன் 2024 ஏப்ரல் மாதத்தின் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்படும் எனவும் கூறியிருந்தார் லோகேஷ். அதுமட்டுமில்லாமல் கைதி,மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்க இருப்பதால் ஆரம்பத்தில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மீண்டும் ரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி?

இந்நிலையில் தலைவர் 171 படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக களமிறங்க இருக்கிறார் என்ற தகவலும் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. விஜய் சேதுபதி ஏற்கனவே ரஜினியின் பேட்ட திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் விஜய் சேதுபதி சில நாட்களுக்கு முன்பாக இனிமேல் வில்லனாக நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இது போன்ற தகவல்கள் பரவி வரும் நிலையில் விஜய் சேதுபதி தரப்பிலும் மறுப்பு தெரிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியானால்தான் இதற்கான விடை கிடைக்கும் .

MUST READ