நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் மிரட்டி வருகிறார். இவர் கடைசியாக மெரி கிறிஸ்மஸ் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து மகாராஜா, ட்ரெயின் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். மேலும் புதிய வெப் தொடர் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார் விஜய் சேதுபதி. இதற்கிடையில் விஜய் சேதுபதி தனது 51வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். VJS51 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஆறுமுக குமார் இயக்கியுள்ளார்.
ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்ற படத்திற்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் VJS51 படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ருக்மினி வசந்த், யோகி பாபு, அவினாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. தற்போது ரிலீஸுக்கு தயாராகி வரும் இந்த படத்திற்கு சத்தியமா பொய் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தன.
ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் ஒரு சில காரணங்களால் படத்தை ரிலீஸ் செய்வதில் தாமதம் ஏற்படுவதால் படத்தின் தலைப்பையும் மாற்ற படக்குழுவினர் திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இது குறித்து அறிவிப்பும் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -