நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக ரத்னம் திரைப்படம் வெளியானது. ஹரி இயக்கத்தில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. அதைத் தொடர்ந்து விஷால் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்கப் போகிறார் என்று ஏற்கனவே விஷால் அறிவித்திருந்தார்.
அதாவது கடந்த 2017 மிஸ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான படம் தான் துப்பறிவாளன். இந்தப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து துப்பறிவாளன் 2 திரைப்படம் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகத் தொடங்கிய நிலையில் ஒரு சில காரணங்களால் மிஸ்கினுக்கும் விஷாலுக்கும் கருத்து வேறுபாடு உண்டாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் அதனை விஷால் தானே இயக்கப் போவதாக முடிவு செய்து துப்பறிவாளன் 2 படத்தின் மூலம் இயக்குனராக உருவெடுக்க போவதாகவும் தெரிவித்திருந்தார். அதன்படி படப்பிடிப்பு கடந்த மே மாதத்தில் தொடங்க இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் துப்பறிவாளன் 2 படத்தை தொடங்க நடிகர் விஷாலுக்கு யாரும் பைனான்ஸ் தர முன் வராததால் இந்த படம் கைவிடப்பட்டது என்று ஒரு தரப்பில் சொல்லப்படுகிறது. மற்றொரு தரப்பில் விஷால் மற்றும் லைக்கா நிறுவனத்திற்கு இடையேயான மோதல் காரணமாகவும் பல பைனான்ஸ் நிறுவனங்கள் விஷாலுக்கு பைனான்ஸ் தர மறுப்பதாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த படம் கைவிடப்பட்டதா? அல்லது சில நாட்கள் கழித்து தொடங்குமா? என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.