சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் 80s பில்டப். இந்த படத்தை ஜாக்பாட் படத்தை இயக்கிய கல்யாண் இயக்கியுள்ளார். இந்த படத்தை ஞானவேல் ராஜா ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். ஜிப்ரான் இதற்கு இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் சந்தானத்துடன் இணைந்து ராதிகா ப்ரீத்தி, கே எஸ் ரவிக்குமார், ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி, மன்சூர் அலிகான், தங்கதுரை மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. 80s பில்டப் ட்ரெய்லரின் மூலம் சந்தானத்தின் மற்ற படங்களைப் போல இந்த படமும் காமெடியான கதைகளத்தில் உருவாகியிருப்பது தெரியவந்துள்ளது.
அதே சமயம் நேற்று சென்னையில் 80s பில்டப் படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. இந்த விழாவில் சந்தானம், கல்யாண், ஞானவேல் ராஜா, கே எஸ் ரவிக்குமார், ஆனந்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கே எஸ் ரவிக்குமார், “இவர்கள் எல்லாம் சொல்வதைப் பார்த்தால் ஆனந்தராஜ் ஐட்டம் கேர்ள் அவார்டு வாங்கிடுவார் போல. இப்போது தான் உங்களுக்கு பல வேடங்கள் பல பரிமாணங்கள் கிடைக்கிறது. எப்போதுமே வில்லனாக நடித்தால் வில்லனாக மட்டுமே நடித்துக் கொண்டிருக்க வேண்டும். இப்போதுதான் உங்களுக்கு வித்தியாசமான கதாபாத்திரங்கள் கிடைக்கிறது” என்று பேசியுள்ளார்.
கே எஸ் ரவிக்குமாரும், ஆனந்தராஜும் நாட்டாமை, பாட்டாளி உள்ளிட்ட படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். மேலும் இயக்குநர் கல்யாண் இயக்கியுள்ள ஜாக்பாட் படத்திலும் 80s பில்டப் படத்திலும் ஆனந்தராஜ் வேடத்தில்
நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.