தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இவர் தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இதற்கிடையில் தான் சில வாரங்களுக்கு முன்பாக விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிம்ரன், நடிகை ஒருவர் தான் தேர்வு செய்து நடிக்கும் கதாபாத்திரங்களை ஆன்ட்டி கதாபாத்திரங்கள் என்று கூறி தன் மனதை காயப்படுத்தியதாக கூறியிருந்தார். அதிலும் சிம்ரன் டப்பா ரோல்களில் நடிப்பதை விட ஆன்ட்டி ரோல்களே மேலானது என்று டப்பா என்பதை குறிப்பிட்டு கூறியிருந்தார். அதன் பிறகு சிம்ரன் கூறிய அந்த நடிகை யார் என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் உலா வந்தது. ஒரு தரப்பினர் அந்த நடிகை ஜோதிகா என்று கூறிவந்தனர். ஏனென்றால் டப்பா கார்டெல் என்ற வெப் தொடரில் ஜோதிகா தம் அடிப்பது போன்ற காட்சிகளில் நடித்திருந்தார். இதனால் அது ஜோதிகாவாக தான் இருக்கும் என பல தகவல்கள் பரவி வந்தது. மற்றொரு தரப்பினர் அந்த நடிகை லைலா என்றும் கூறி வந்தனர். இந்நிலையில் நடிகை சிம்ரன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில், “இங்கு நிறைய வெப் சீரிஸ்கள் வருகிறது. அதில் டப்பா கார்டெல் வெப் சீரிஸ் ஒரு நல்ல வெப் சீரிஸ். நானும் அந்த வெப் சீரிஸை பார்த்திருக்கிறேன். நான் அன்று பேசியது சேர வேண்டிய நபருக்கு சரியாக சென்று சேர்ந்துள்ளது. அது சரியாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.
#Simran open about the recent CONTROVERSY !!
“DabbaCartel is a nice webseries, people are just breaking down with their speculation. It reached the person correctly whom I mentioned. That person messaged me that she is sorry & didn’t mean to hurt me”pic.twitter.com/HbSvaWwDNP
— AmuthaBharathi (@CinemaWithAB) May 21, 2025
நான் அன்று திட்டத்துடன் பேசவில்லை. உண்மையிலேயே எனக்கு நடந்ததை சொன்னேன். அந்த மேடை எனக்கான மேடை என்பதால் அதை நான் பகிர்ந்து கொண்டேன். நான் புறம் பேசுபவள் இல்லை. எனக்கு தனி நண்பர்கள் கிடையாது. எனவே நான் இதை அந்த மேடையில் பகிர்ந்து கொண்டேன். அந்த நடிகை அவருடைய கருத்தை சொல்வதற்காக தான் அப்படி பேசினார் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் அவர் அதை வெளிப்படுத்த பயன்படுத்திய வார்த்தைகள் தான் என்னை மிகவும் காயப்படுத்தியது. அந்த சம்பவத்திற்கு பின் அந்த நடிகை, மன்னித்து விடுங்கள், உங்கள் மனதை காயப்படுத்த வேண்டும் என்பதற்காக நான் அப்படி செய்யவில்லை என்று எனக்கு மெசேஜ் அனுப்பினார்” என்று தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் அந்த நடிகை ஜோதிகா தான் என்று நெட்டிசன்கள் ஜோதிகாவை தாக்கி வருகின்றனர்.