நடிகை இவானா ஆரம்பத்தில் மலையாள திரைப்படங்களில் நடித்து வந்தார். தமிழ் சினிமாவில் கடந்த 2018 ஆம் ஆண்டில் ஜோதிகா மற்றும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான நாச்சியார் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பாலா இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இவானாவின் பெயரும் ரசிகர்களிடையே கவனம் பெற்றது. அதைத்தொடர்ந்து ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயனின் தங்கையாக நடித்திருந்தார். அதன் பிறகு கடந்தாண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் பேவரைட் ஹீரோயின் ஆக மாறினார் நடிகை இவானா. லவ் டுடே படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இவனாவிற்கு பல பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் ஹரிஷ் கல்யாணு டன் இணைந்து எல் ஜி எம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது மதிமாறன் எனும் புதிய படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் இவானாவுடன் இணைந்து வெங்கட் செங்குட்டுவன் நடிக்கிறார். பாப்பின் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில் உருவாகும் மதிமாறன் படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. மேலும் இந்த போஸ்டரில் இப்படம் டிசம்பர் மாதத்தில் வெளியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- Advertisement -