ஜெயிலர் 2 படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் ‘கூலி’ திரைப்படம் வெளியானது. கோலிவுட்டில் ஆயிரம் கோடி ரூபாயை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், ரூ.500 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது. இதைத்தொடர்ந்து ரஜினி, ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2023 இல் வெளியான ‘ஜெயிலர்’ முதல் பாகத்தில் நடித்திருந்த ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா மேனன் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர். இது தவிர எஸ்.ஜே. சூர்யா, பூர்ணா, வித்யா பாலன் போன்ற நட்சத்திர பட்டாளங்கள் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் ‘ஜெயிலர்’ முதல் பாகத்தில் கேமியோ ரோலில் நடித்த சிவராஜ்குமார் மற்றும் மோகன்லால் ஆகியோர் ‘ஜெயிலர் 2’ படத்திலும் கேமியோ ரோலில் நடிப்பார்கள் என்று பல தகவல்கள் வெளியானது. அதன்படி சிவராஜ்குமார் படப்பிடிப்பில் இணைந்திருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்ற அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஜெயிலர்’ படத்தில் சிவராஜ்குமாரின் காட்சிகள் சில நிமிடங்களே இடம் பெற்றிருந்தாலும், அது ஸ்பெஷல் ஹைலைட்டாக அமைந்ததோடு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் கொடுத்தது. எனவே இயக்குனர் நெல்சன், அதே போன்ற மேஜிக்கை ‘ஜெயிலர் 2’ படத்திலும் நிகழ்த்துவார் என்று நம்பப்படுகிறது. அடுத்தது இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் இந்த ஆண்டு நிறைவடைந்து விடும் எனவும் படமானது 2026 ஆகஸ்டில் திரைக்கு வரும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.