ரஜினி, நெல்சன் திலிப் குமார் காம்போவில் உருவான ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் உருவான இப்படம் கிட்டத்தட்ட 4000 திரையரங்குகளில் திரையிடப்பட்டது.
இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மிர்னா மேனன், விநாயகன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அத்துடன் மோகன் லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா உள்ளிட்டோர் கேமியோ ரோலில் நடித்திருந்தனர்.
சிலை கடத்தல் சம்பந்தமான கதைகளத்தில் உருவாகியிருந்தேன் படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்டது. மேலும் ரஜினிக்கும் நெல்சன் திலீப் குமாருக்கும் இது ஒரு சிறந்த கம்பேக் படமாக அமைந்துள்ளது.
அந்த வகையில் முதல் நாளே உலகம் முழுவதும் 25 கோடி வரை வசூல் செய்தது. தொடர்ந்து திரையரங்குகளில் கூட்டம் அலைமோத வசூலில் குறையவில்லை.
இந்நிலையில் வெளியாகி 3 நாட்களில் 130 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுதந்திர தின விடுமுறை நாட்கள் என்பதால் இனி வரும் நாட்களில் 200 கோடியை விரைவில் தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.