spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபாக்ஸ் ஆஃபீஸில் அலப்பறையை கிளப்பும் 'ஜெயிலர்'!

பாக்ஸ் ஆஃபீஸில் அலப்பறையை கிளப்பும் ‘ஜெயிலர்’!

-

- Advertisement -

ரஜினி, நெல்சன் திலீப் குமார் கூட்டணியில் உருவான ‘ஜெயிலர்‘ திரைப்படம் நேற்று பான் இந்திய அளவில் வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மோகன்லால், சிவராஜ்குமார், விநாயகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இந்த படம் கிட்டத்தட்ட 7000 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. அண்ணாத்த படத்திற்குப் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து ரஜினியின் திரைப்படம் வெளியானதால் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதியது.

அதே வேளையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாகவும் இப்படம் அமைந்திருந்தது. அதனால் ரசிகர்கள் பலரும் ஜெயிலர் திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர். சிலை கடத்தல் சம்பந்தமான கதையை மையமாக வைத்து வெளியான இப்படம் நெல்சனுக்கும், ரஜினிக்கும் ஒரு சிறந்த கம்பேக் படமாக அமைந்துள்ளது. மேலும் இந்த படம் ஒரு செம மாஸான படமாக இருப்பதற்கு காரணம் ஒளிப்பதிவும், அனிருத்தின் பின்னணி இசையும் தான்.

we-r-hiring

இவ்வாறாக பல்வேறு தரப்பினரிடையே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வரும் இந்த படம் முதல் நாளே அதிக அளவு வசூலை ஈட்டியுள்ளது. அந்த வகையில் இந்தியா முழுவதும் 51 கோடி வரையிலும், தமிழகத்தில் மட்டும் 23 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இனி வரும் நாட்களிலும் வசூல் வேட்டையில் தொடர்ந்து அலப்பறை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ