Homeசெய்திகள்சினிமாஜெயிலர் Vs லியோ.... பாக்ஸ் ஆபிஸ் வின்னர் யார்?

ஜெயிலர் Vs லியோ…. பாக்ஸ் ஆபிஸ் வின்னர் யார்?

-

- Advertisement -

ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கிய திரைப்படம் தான் ஜெயிலர். இதில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு மற்றும் பலர் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதேசமயம் வசூலிலும் வரலாற்று சாதனை படைத்தது. அந்த வகையில் ஜெயிலர் திரைப்படமானது, உலக அளவில் 607 கோடி ரூபாய் வரை வசூல் செய்து வெற்றி பெற்றது.ஜெயிலர் Vs லியோ.... பாக்ஸ் ஆபிஸ் வின்னர் யார்?

அதே போன்று கடந்த அக்டோபர் 19ஆம் நாளில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அதிக வசூலை பெற்று தந்தது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. இந்த படத்தில் விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.ஜெயிலர் Vs லியோ.... பாக்ஸ் ஆபிஸ் வின்னர் யார்?

மேலும் ஜெயிலர் மற்றும் லியோ ஆகிய இரண்டு படங்களுக்கும் ராக்ஸ்டார் அனிருத் தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பாண்டில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் பாகம் 2 படம் எதிர்பார்த்த அளவில் வசூலை பெற்று தரவில்லை. பாக்ஸ் ஆபிஸில் 350 கோடி வரை மட்டுமே வசூல் செய்தது. ஆனால்
அதைத் தொடர்ந்து வெளியான ஜெயிலர் மற்றும் லியோ ஆகிய இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியது. அந்த வகையில் ஜெயிலரை ஓரங்கட்டி லியோ வெற்றி பெற்றது.

MUST READ