spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'ஜனநாயகன்' ரீமேக் படம் இல்ல.... ஆனா அந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியது எதற்காக?

‘ஜனநாயகன்’ ரீமேக் படம் இல்ல…. ஆனா அந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியது எதற்காக?

-

- Advertisement -

விஜய் நடிப்பில் தற்போது ஜனநாயகன் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை ஹெச். வினோத் இயக்குகிறார். கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். 'ஜனநாயகன்' ரீமேக் படம் இல்ல.... ஆனா அந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியது எதற்காக?சத்யன் சூரியன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். அரசியல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டு, விரைவில் முடிவடைய இருக்கிறது. இதற்கிடையில் இப்படம் 2026 பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 'ஜனநாயகன்' ரீமேக் படம் இல்ல.... ஆனா அந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியது எதற்காக?விஜயின் கடைசி படம் இது என்பதால் இப்படத்தை காண ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, ஜனநாயகன் திரைப்படமானது தெலுங்கில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக் என்று பல தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அதேசமயம் பகவந்த கேசரி படக்குழுவினரிடம், ஜனநாயகன் படக்குழு ரீமேக் உரிமையை அதிகாரப்பூர்வமாக பெற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. 'ஜனநாயகன்' ரீமேக் படம் இல்ல.... ஆனா அந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியது எதற்காக?ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், பகவந்த் கேசரி படத்தில் இடம்பெற்ற Good Touch & Bad Touch காட்சியை ஜனநாயகன் படத்தில் பயன்படுத்தி இருப்பதாகவும், ரிலீஸுக்கு பிறகு எந்த சட்ட சிக்கலும் வந்து விடக்கூடாது என்பதற்காகவும் தான் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வ ரீமேக் உரிமையை பெற்றுள்ளனார் என்று லேட்டஸ்ட் தகவல் வெளிவந்துள்ளது. இருப்பினும் மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ