Homeசெய்திகள்சினிமாநாகர்ஜூனாவின் மகனுக்கு ஜோடியாகும் ஸ்ரீதேவியின் மகள்!?

நாகர்ஜூனாவின் மகனுக்கு ஜோடியாகும் ஸ்ரீதேவியின் மகள்!?

-

- Advertisement -

நாகார்ஜுனாவின் மகன் அகில் அக்கினேனி நடிப்பில் ஏஜென்ட் என்ற திரைப்படம் வெளியாகி தோல்வியைச் சந்தித்துள்ளது.

ஏஜென்ட் படம் மக்கள் வரவேற்பைப் பெற தவறியுள்ளது. படம் 80 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் படம் வெளியாகி நான்கு நாட்களில் வெறும் 10 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் அகில் நடிக்கும் புதிய படத்தில் ஜான்வி கபூர் அவருக்கு  ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அகில் அக்கினேனி அறிமுக இயக்குனர் அனில் குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் தான் ஜான்வி கபூர் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் தென்னிந்திய படங்களில் நடிக்க அவர் அதிக ஆர்வமாக இருக்கிறார். ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் மூலம் அவர் தெலுங்கு சினிமாவில் அறிமுகம் ஆகிறார்.  ராம் சரண் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்திலும் ஜான்வி கபூர் கதாநாயகியாக இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இன்னும் பல படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜான்வி தெலுங்கில் வாய்ப்புகளை அள்ளி வருகிறார்.

 

MUST READ