Homeசெய்திகள்சினிமாதெலுங்கில் அடுத்தடுத்து நடிக்கும் ஜான்வி கபூர்... ராம்சரண் படத்தில் ஒப்பந்தம்...

தெலுங்கில் அடுத்தடுத்து நடிக்கும் ஜான்வி கபூர்… ராம்சரண் படத்தில் ஒப்பந்தம்…

-

ராம்சரண், தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் ஆர் ஆர் ஆர் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்கிறார். எஸ் ஜே சூர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் இத்திரைப்படம் பான் இந்திய அளவில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் ராம் சரண் புச்சிபாபு இயக்கத்தில் தனது அடுத்த படத்தை நடிக்க உள்ளார். இது ராம்சரண் நடிக்கும் 16-வது படமாகும். மைத்திரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படம் விளையாட்டை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட இருப்பதாகவும் ராம்சரண் இதில் விளையாட்டு வீரராக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையியில், இத்திரைப்படத்தில் நாயகியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஜூனியர் என்டிஆருடன் தேவரா படத்தில் நடித்து வரும் ஜான்வி அடுத்ததாக ராம்சரண் படத்தில் நடிக்கிறார். விரைவில் அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ