Homeசெய்திகள்சினிமாமுன்னாள் முதலமைச்சர் பேரனை கரம்பிடிக்கும் ஜான்வி... திருப்பதியில் மணமுடிக்க ஆசை... முன்னாள் முதலமைச்சர் பேரனை கரம்பிடிக்கும் ஜான்வி… திருப்பதியில் மணமுடிக்க ஆசை…
- Advertisement -

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய திரையுலகம் மட்டுமன்றி இந்தி மொழியிலும் பெண் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் இந்தி பட நடிகரும், தயாரிப்பாளருமான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கும் பிறகும் அவர் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், துபாய் சென்ற அவர் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். ஸ்ரீதேவி – போனி கபூர் தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஜான்வி கபூர், இரண்டாவது மகள் குஷி கபூர்.

தற்போது ஜான்வி கபூர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் தேவரா படத்தில் நாயகியாக நடிக்கிறார். இதன் மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் தடம் பதிக்க உள்ளார். அடுத்து ராம்சரண் நடிக்கும் 16-வது திரைப்படத்திலும் ஜான்வி கபூர் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். புச்சிபாபு இப்படத்தை இயக்குகிறார். தமிழில் இவரது தந்தை போனி கபூர், நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு ஆகிய திரைப்படங்களை தயாரித்து உள்ளார். இரண்டாவது மகள் குஷி கபூரும் தற்போது பாலிவுட்டில் அறிமுகமாகி நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை ஜான்வி கபூர், முன்னாள் மராட்டிய முதலமைச்சர் சுசில்குமார் ஷிண்டேவின் பேரனும், நடிகருமான ஷிகர் பஹாரியாவை காதலிக்கிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், திருப்பதியில் தன் திருமணத்தை நடத்தவும், திருமணத்தன்று காஞ்சிபுரம் பட்டு புடவையை உடுத்த ஆசை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜான்வி, ஷிகர் இருவரும் பல இடங்களுக்கு இணைந்தே செல்கின்றனர். குறிப்பாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருவரும் அடிக்கடி சாமி தரிசனம் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும்.