spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅடுத்தடுத்த படங்களில் இயக்குனராக கமிட்டாகும் ஜேசன் சஞ்சய்!

அடுத்தடுத்த படங்களில் இயக்குனராக கமிட்டாகும் ஜேசன் சஞ்சய்!

-

- Advertisement -
kadalkanni

தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். இவரது மகன் ஜேசன் சஞ்சய் நடிகராக மாறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இயக்குனராக உருவெடுத்துள்ளார்.அடுத்தடுத்த படங்களில் இயக்குனராக கமிட்டாகும் ஜேசன் சஞ்சய்! அதன்படி கடந்த ஆண்டு ஜேசன் சஞ்சய் , லைக்கா நிறுவனத்துடன் கூட்டணி அமைத்தார். இவர் இயக்க உள்ள புதிய படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க போவதாக அறிவிப்பு வெளியானது. அதன் பின்னர் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் யார் ஹீரோ என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. நடிகர் கவின் ஆகியோர் அந்தப் பட்டியலில் இருந்து வந்தனர். அதை தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடிகர் சந்தீப் கிஷன், ஜேசன் சஞ்சய் சஞ்சய் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியானது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. படப்பிடிப்புகளும் தொடங்கப்படவில்லை.அடுத்தடுத்த படங்களில் இயக்குனராக கமிட்டாகும் ஜேசன் சஞ்சய்! இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கும் இரண்டாவது படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஜேசன் சஞ்சயின் இரண்டாவது படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் முதல் படமே இன்னும் தொடங்கவில்லை. அதற்குள் இரண்டாவது படமா? என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

MUST READ