ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு பிறகு, சைரன், இறைவன், ஜன கன மன உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் திரைக்கு வர இருக்கின்றன.
இதைத்தொடர்ந்து, எம் ராஜேஷ் , கிருத்திகா உதயநிதி, கார்த்திக் தங்கவேல் ஆகியோரின் இயக்கத்தில் தனது அடுத்தடுத்த படங்களை நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது.
இதற்கிடையில் ஜெயம் ரவி தனது 32 வது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை இயக்குனர் மிஷ்கினின் உதவி இயக்குனரான புவனேஷ் இயக்க இருக்கிறார். படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கிருத்தி செட்டி, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க இருக்கிறார்.

சுமார் 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள படத்தின் பூஜை நாளை (ஜூன் 5) தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. பூஜை தொடங்கிய பின் முதல் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் எனவும் அதன் பின் ஜூலை 20ஆம் தேதி படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.


