நடிகர் ஜெயம் ரவி தனது JR 34 படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.
நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவரது நடிப்பில் கடைசியாக பிரதர் திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து வருகின்ற ஜனவரி 14 பொங்கல் தினத்தன்று காதலிக்க நேரமில்லை எனும் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் இவர், சிவகார்த்திகேயன் மற்றும் சுதா கொங்கரா ஆகியோரின் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். மேலும் பல படங்களில் ஹீரோவாக நடிப்பதற்கு கமிட் ஆகி வருகிறார். அந்த வகையில் கடந்த 2023 ஆம் ஆண்டு கவின் நடிப்பில் வெளியான டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் தனது 34 வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் ஜெயம் ரவி. இந்த படத்திற்கு தற்காலிகமாக JR 34 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து தெளதி ஜிவால் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து பிரதீப் ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பூஜையுடன் தொடங்கப்பட்டது.
#JayamRavi about his Next Project
– Next I’m going to do a film with #Dada Director #GaneshKBabu, I like that film so much
– It is a Political Film & A Good Mass Film#KadhalikkaNeramillaipic.twitter.com/d0v91b4csw— Movie Tamil (@MovieTamil4) January 10, 2025

இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி காதலிக்க நேரமில்லை படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது JR 34 படம் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, “கணேஷ் கே பாபு இயக்கத்தில் என்னுடைய அடுத்த படம் எனக்கு மிகவும் பிடித்த படம். இந்த படம் ஒரு அரசியல் படம். அதே சமயம் ஒரு நல்ல மாஸான படம்” என்று அப்டேட் கொடுத்துள்ளார்.