Homeசெய்திகள்சினிமாகேமியோ ரோலில் நடிக்கும் ஜெயம் ரவி..... 'தக் லைஃப்' பட அப்டேட்!

கேமியோ ரோலில் நடிக்கும் ஜெயம் ரவி….. ‘தக் லைஃப்’ பட அப்டேட்!

-

- Advertisement -

மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் திரைப்படம் உருவாகி வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் இந்த படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து ஜெயம் ரவி, திரிஷா, துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்ட விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கேமியோ ரோலில் நடிக்கும் ஜெயம் ரவி..... 'தக் லைஃப்' பட அப்டேட்!அதே சமயம் இத்திரைப்படம் ஆக்சன் கலந்த கதை களத்தில் தயாராகி வருகிறது. இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி, தக் லைஃப் படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதாவது சமீபத்தில் நடந்த பேட்டியில், ஜெயம் ரவியிடம் பொன்னியின் செல்வன் பாகம் 1, பொன்னியின் செல்வன் பாகம் 2, தக் லைஃப் உள்ளிட்ட படங்களைப் போல் மல்டி ஸ்டார் படங்களில் இனி நடிப்பீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. கேமியோ ரோலில் நடிக்கும் ஜெயம் ரவி..... 'தக் லைஃப்' பட அப்டேட்!இதற்கு ஜெயம் ரவி, “மணிரத்னம் சாருக்கு என்னால் நோ சொல்ல முடியாது. அதனால் தக் லைஃப் படத்தை ஏற்றுக் கொண்டேன். இந்த படத்தில் நீட்டிக்கப்பட்ட கேமியோ ரோலில் நான் நடிக்கிறேன். என்னுடைய போர்ஷன் மார்ச் 1ஆம் தேதி ஆரம்பமாகிறது” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ