Homeசெய்திகள்சினிமாபுதிய பரிமாணத்தில் ஜெயம் ரவி..... மிரள வைக்கும் 'இறைவன்' ட்ரெய்லர் வெளியீடு!

புதிய பரிமாணத்தில் ஜெயம் ரவி….. மிரள வைக்கும் ‘இறைவன்’ ட்ரெய்லர் வெளியீடு!

-

இறைவன் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் இறைவன் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். நரேன், ராகுல் போஸ், விஜயலக்ஷ்மி, ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சைக்கோ திரில்லர் கதை களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை மனிதன், வாமனன், என்றென்றும் புன்னகை உள்ளிட்ட படங்களை இயக்கிய ஐ அகமது இயக்கியுள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் யுவன் சங்கர் ராஜாயிலும் இப்படம் உருவாகி உள்ளது. சில மாதங்களுக்கு முன்பே படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருந்தது.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

அதைத்தொடர்ந்து தற்போது படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.  சிறுமிகளை கொலை செய்யும் சைக்கோ கொலையாளியாக ராகுல் போஸ் நடித்துள்ளார். போலீஸ் அதிகாரியாக ஜெயம் ரவி நடித்துள்ளார். இதுவரை இல்லாத புதிய பரிமாணத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார். தற்போது இந்த ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. மேலும் இப்படம் வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ