spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇந்த படத்திற்கு 'பிரதர்'-னு நான் தான் டைட்டில் வச்சேன்.... ஜெயம் ரவி பேச்சு!

இந்த படத்திற்கு ‘பிரதர்’-னு நான் தான் டைட்டில் வச்சேன்…. ஜெயம் ரவி பேச்சு!

-

- Advertisement -

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பிரதர். இந்த படத்தை எம். ராஜேஷ் இயக்கியிருக்கிறார். ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் படத்தினை தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு 'பிரதர்'-னு நான் தான் டைட்டில் வச்சேன்.... ஜெயம் ரவி பேச்சு!ஹாரிஸ் ஜெயராஜ் இதற்கு இசையமைத்திருக்கிறார். விவேகானந்த் சந்தோசம் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்திருக்கிறார். ஜெயம் ரவிக்கு அக்காவாக பூமிகா சாவ்லா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து சரண்யா பொன்வண்ணன், நட்டி நட்ராஜ், விடிவி கணேஷ் சீதா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் அக்கா – தம்பி உறவை மையமாக வைத்து குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கிறது. இந்த படம் வருகின்ற தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (செப்டம்பர் 21) சென்னையில் நடைபெற்று வருகிறது. அந்த விழாவில் ஜெயம் ரவி, எம் ராஜேஷ், பூமிகா சாவ்லா, பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்ட பட குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். அந்த விழாவில் பேசிய ஜெயம் ரவி, இந்த படத்திற்கு பிரதர் என்று நான் தான் டைட்டில் வைத்தேன் என்று கூறியுள்ளார். இந்த படத்திற்கு 'பிரதர்'-னு நான் தான் டைட்டில் வச்சேன்.... ஜெயம் ரவி பேச்சு!அதாவது “குடும்ப பொழுதுபோக்கு படம் என்பதால் பூங்காவனம் என்றெல்லாம் டைட்டில் யோசித்துப் பார்த்தோம். ஆனால் ஒன்றுமே செட்டாகவில்லை. அப்போதுதான் ராஜேஷ், அப்போ என்னதான் வைக்கிறது பிரதர் என்று என்னிடம் கேட்டார். அப்போதுதான் இதையே டைட்டிலாக வைத்து விடுவோம் என்று சொன்னேன். என்னதான் வைக்கிறது பிரதர் என்பதை எப்படி டைட்டில் ஆக வைப்பது என்று ராஜேஷ் கேட்டார். பிரதர் என்பதை டைட்டிலாக வைத்து விடுவோம் என்று சொன்னேன். நாங்கள் எங்கள் டீமில் ஒவ்வொருவரையும் பிரதர் என்றுதான் சொல்லுவோம். அதனால் இந்த வார்த்தை உணர்வுபூர்வமாக இருந்தது. அதனால் இதையே டைட்டிலாக வைத்து விட்டோம். எங்கள் டீமிலும் எல்லாரும் ஓகே சொல்லி விட்டார்கள்” என்று கலகலப்பாக பேசியுள்ளார் ஜெயம் ரவி.

MUST READ