spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஜெயம் ரவியின் 'பிரதர்'..... மக்காமிஷி பாடல் ரிலீஸ் எப்போது?

ஜெயம் ரவியின் ‘பிரதர்’….. மக்காமிஷி பாடல் ரிலீஸ் எப்போது?

-

- Advertisement -

பிரதர் படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.ஜெயம் ரவியின் 'பிரதர்'..... மக்காமிஷி பாடல் ரிலீஸ் எப்போது?

நடிகர் ஜெயம் ரவி தற்போது ஜீனி, காதலிக்க நேரமில்லை போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான எம். ராஜேஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். ஜெயம் ரவியின் 30வது படமான இந்த படத்திற்கு பிரதர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க அக்காவாக பூமிகா சாவ்லா நடித்துள்ளார். ஜெயம் ரவியின் 'பிரதர்'..... மக்காமிஷி பாடல் ரிலீஸ் எப்போது?மேலும் இவர்களுடன் இணைந்து சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படமானது அக்கா – தம்பி உறவை அடிப்படையாக கொண்டு ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. எனவே விரைவில் படத்தின் இசை வெளியிட்ட விழாவை நடத்தி ஒரே நாளில் பாடல் முழுவதையும் வெளியிடப்படக் குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் சமீபத்தில் படத்தின் அறிவிப்பு வீடியோவிற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக பிரதர் படத்தின் முதல் பாடலை, இசை வெளியீட்டு விழாவிற்கு முன்பாக வெளியிட பட குழு முடிவு செய்தது. அதன்படி மக்காமிஷி என்பதுதான் படத்தின் முதல் பாடல் என்று தெரிவித்திருந்தது.

we-r-hiring

எனவே ரசிகர்கள் பலரும் மக்காமிஷி என்றால் என்ன? அதற்கு என்ன அர்த்தம் என்ற குழப்பத்தில் இருந்து வந்தனர். மேலும் அதை தெரிந்து கொள்ள காத்திருக்குமாறும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் வருகின்ற ஜூலை 20 ஆம் தேதி மக்காமிஷி பாடல் வெளியாக இருப்பதாக புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

பிரதர் திரைப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரிக்க ஹாரிஸ் ஜெயராஜ் படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ