Homeசெய்திகள்சினிமாஜெயம் ரவி நடிக்கும் 'JR 34' படத்தின் படப்பிடிப்பு இந்த தேதியில் தான்!

ஜெயம் ரவி நடிக்கும் ‘JR 34’ படத்தின் படப்பிடிப்பு இந்த தேதியில் தான்!

-

- Advertisement -

ஜெயம் ரவி நடிக்கும் JR 34 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவரது நடிப்பில் கடைசியாக பிரதர் எனும் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. ஜெயம் ரவி நடிக்கும் 'JR 34' படத்தின் படப்பிடிப்பு இந்த தேதியில் தான்!அடுத்தது காதலிக்க நேரமில்லை, ஜீனி போன்ற படங்கள் இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் நிலையில் அடுத்தடுத்து திரைக்கு வர தயாராகி வருகின்றன. இதற்கிடையில் ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி வருகிறார் ஜெயம் ரவி. அந்த வகையில் சிவகார்த்திகேயனின் 25 வது படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார். மேலும் கவின் நடிப்பில் வெளியான டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படமானது ஜெயம் ரவியின் 34 வது படமாகும். எனவே தற்காலிகமாக JR 34 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. ஜெயம் ரவி நடிக்கும் 'JR 34' படத்தின் படப்பிடிப்பு இந்த தேதியில் தான்!அதைத்தொடர்ந்து இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து பிக் பாஸ் பிரபலம் பிரதீப் ஆண்டனி நடிக்க உள்ளதாகவும் ரத்னகுமார் இந்தப் படத்தில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்ற உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் 16ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் இந்த படமானது வடசென்னையை பின்னணியாக கொண்டு உருவாக இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ