- Advertisement -
ஜெயம்ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் சைரன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் நாயகன் ஜெயம்ரவி. அவரது பெயரில் இருப்பது போல ஜெயம் படத்தின் மூலம் திரைக்கு அவர் அறிமுகமாகினார். தொடர்ந்து அவரது அண்ணன் மோகன் இயக்கிய படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்த ஜெயம் ரவி குறுகிய காலத்திலேயே முதன்மை நாயகராக உருவெடுத்தார். கடந்த ஆண்டு ஜெயம்ரவி உள்பட பெரும் நட்சத்திர பட்டாள நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.


ஆனால், இப்படத்தைத்தொடர்ந்து ஜெயம் ரவி நடித்த அகிலன், இறைவன், ஆகிய திரைப்படங்கள் தோல்வியைத் தழுவின. அஹமத் இந்த படத்தை இயக்கியிருந்தார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். இத்திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து, ஜெயம்ரவி நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் சைரன். ஆண்டனி பாக்யராஜ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் ஜெயம்ரவியுடன் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



