நடிகர் ஜெயம் ரவியின் 34 வது படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் காதலிக்க நேரமில்லை, ஜீனி போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். குறிப்பாக இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் பிரதர் திரைப்படம் வருகின்ற தீபாவளி தினத்தன்று திரைக்கு வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து ஜெயம் ரவி கார்த்திக் சுப்பராஜ் , பாக்யராஜ் கண்ணன் ஆகியோரின் இயக்கத்தில் தனது அடுத்தடுத்த படங்களில் நடிக்க இருக்கிறார்.
தனி ஒருவன் 2 திரைப்படமும் அவரது லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில் ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் ஜெயம் ரவி நடிக்க இருக்கிறார். இந்த படம் ஜெயம் ரவியின் 34 ஆவது படமாகும். எனவே இது தொடர்பான முக்கிய அறிவிப்பு நாளை காலை 10.50 மணி அளவில் வெளியாகும் என பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

அடுத்தது ஜெயம் ரவியின் 34 வது திரைப்படத்தை டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கப் போவதாகவும் ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்கப் போவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.