Homeசெய்திகள்சினிமாபொன்னியின் செல்வன் 2 ரிலீஸ்... மனைவி உடன் சபரிமலைக்கு புறப்பட்ட ஜெயராம்!

பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ்… மனைவி உடன் சபரிமலைக்கு புறப்பட்ட ஜெயராம்!

-

நடிகர் ஜெயராம் மனைவி உடன் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.

ஜெயராம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் ஆழ்வார்க்கடியான் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்தக் கதாபாத்திரம் படத்திற்கு மிகவும் முக்கியமானது. அதற்காக ஜெயராமும் உடலை பெரிதாக்கி தொப்பை வரவைத்து மிகவும் சிரமப்பட்டுள்ளார்.

முதல் பாகத்தில் அவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் ஏப்ரல் 28-ம் தேதி பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜெயராம் தன் மனைவி உடன் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாவதற்கு முன்னரும் அவர் ஜெயம் ரவியுடன் சபரிமலை கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் ஜெயராம், ஜெயம் ரவி மற்றும் கார்த்தி மூவரும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டனர்.

கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துளிபாலா, ஜெயராம், விக்ரம் பிரபு, பிரபு, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் என நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

MUST READ