ஜித்தன் ரமேஷின் ‘ரூட் நம்பர்.17’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர் பி சௌத்ரியின் மூத்த மகன் ரமேஷ், கடந்த 2005 இல் வெளியான ஜித்தன் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து புலி வருது, ஜித்தன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதைத்தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்தில் சிம்புவுக்கு அண்ணனாக நடித்திருந்தார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியான ஃபர்ஹானா, ஜப்பான் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.

அடுத்ததாக ஜித்தன் ரமேஷ் நீண்ட இடைவெளிக்கு பிறகு ரூட் நம்பர் 17 எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படத்தை அபிலாஷ் ஜி தேவன் எழுதி இயக்கியிருந்தார். பிரசாந்த் பிரணவம் ஒளிப்பதிவு செய்திருந்த நிலையில் ஓசேப்பச்சன் இதற்கு இசையமைத்திருந்தார். நேனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்தில் ஜித்தன் ரமேஷ் உடன் இணைந்து அருவி மதன், ஹரிஷ் பேரடி, அகில் பிரபாகர், ஜெனிபர் மேத்யூ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர் என்பது இருப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஜித்தன் ரமேஷ் மிகவும் வித்தியாசமான லுக்கில் நடித்திருந்தார்.
இந்த படம் கடந்த 2023 டிசம்பர் 29ஆம் தேதி தமிழகம் முழுவதும் வெளியானது. இந்நிலையில் இப்படம் வருகின்ற பிப்ரவரி 16ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


