ஜோ பட இயக்குனரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ரியோ ராஜ் இயக்கத்தில் ஜோ திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் மாளவிகா மனோஜ், பவ்யா த்ரிகா ஆகியோர் ரியோ ராஜுடன் இணைந்து நடித்திருந்தனர். காதல் கதைக்களத்தில் எதிர்பாராத திருப்பங்களுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. மேலும் இந்த படத்தை இயக்கிய அறிமுகம் இயக்குனர் ஹரிஹரன் ராம் பலராலும் பாராட்டப்பட்டார். இது தொடர்ந்து ஹரிஹரன் ராம் என்ன படம் இயக்கப் போகிறார்? என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. அதன்படி தற்போது இவருடைய அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது பிரபல இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, ஹரிஹரன் ராமின் அடுத்த படத்தில் நடிக்க உள்ளாராம். ஹரிஹரன் ராம் ஏற்கனவே ஹிப் ஹாப் ஆதியின் இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியான மீசைய முறுக்கு திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஹிப் ஹாப் ஆதியை, ஹரிஹரன் ராம் இயக்கப் போகும் தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. மேலும் இந்த படத்தினை பிரமோத் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. இனிவரும் நாட்களில் இந்த படத்தின் கதாநாயகி குறித்த தகவலும், மற்ற தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.