Homeசெய்திகள்சினிமாமீண்டும் இணையும் 'ஜோ' பட கூட்டணி.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மீண்டும் இணையும் ‘ஜோ’ பட கூட்டணி…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

நடிகர் ரியோ ராஜ் ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றியவர். அப்பொழுதே தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருந்தார். மீண்டும் இணையும் 'ஜோ' பட கூட்டணி.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!தொடர்ந்து ரியோ ராஜ் , நெஞ்சமுண்டு நேர்முண்டு ஓடு ராஜா என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பெயர் பெற்றார். கடந்தாண்டு ரியோ ராஜ் நடிப்பில் ஜோ எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஹரிஹரன் ராம் இயக்கியிருந்த நிலையில் இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இன்றுவரையிலும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது. அந்த அளவிற்கு அழகான காதலை நேர்த்தியான கதைக்களத்தின் மூலம் வெளிப்படுத்தி இருந்தார் இயக்குனர். அதேசமயம் படத்தில் நடித்திருந்த ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் ஆகியோரும் தங்களின் சிறப்பான நடிப்பின் மூலம் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்றனர். இந்நிலையில் இந்த ஜோடி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய இருக்கிறது.

இந்த படத்தை ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க கலையரசன் தங்கவேல் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைக்க மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜை உடன் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பட குழுவினர் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்து அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ