- Advertisement -
நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தை ஏ. ஆர். முருகதாஸ் இயக்கினார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, அவர் இளைய தளபதி விஜயை வைத்து இயக்கப் போவதாக பேசப்பட்டது. ஆனால் அது நடக்காமல் போய்விட்டது.
மேலும், அவரகள் இருவரின் கூட்டணியில் வெளிவந்த கத்தி மற்றும் சர்கார் ஆகிய இரண்டு படங்களும் மாபெரும் வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏ. ஆர். முருகதாஸ் மீண்டும் தன் புதிய பட வேலையில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.
அவர் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், படம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.